தமிழ்நாடு

நடிகர் பாண்டு மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்

6th May 2021 12:21 PM

ADVERTISEMENT


சென்னை: கரோனா பாதித்து உயிரிழந்த நடிகர் பாண்டு மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான  பாண்டு கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

 

ADVERTISEMENT

தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் பாண்டு. நகைச்சுவையில் தனக்கெனத் தனி பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : pandu stalin coronavirus actor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT