தமிழ்நாடு

69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அதிமுக

6th May 2021 05:57 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ADVERTISEMENT

தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கும், சமூக நீதி பாதுகாப்பிற்கும் அடிப்படையாக 69 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த தீர்ப்பின் எதிரொலியாக 69% இடஒதுக்கீடு என்ன ஆகுமோ என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT