தமிழ்நாடு

தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

6th May 2021 12:46 PM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மும்பையில் இருந்து வரவுள்ளன. 

கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்த தமிழகம் முழுவதும் சுமாா் 5,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தற்போது தமிழகத்தில் 5.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில் இன்று மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து தமிழகம் வரவுள்ளன. 

இன்று மாலை 6.50 மையளவில் சென்னை வந்தடையும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT