தமிழ்நாடு

கரோனா: மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள்

5th May 2021 07:31 PM

ADVERTISEMENT


கரோனா தடுப்புப் பணிகளுக்காக மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை (மே 6) முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளைத் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. 

இதனிடையே அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகளைக் கண்காணிக்க
அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

காவல்துறையைச் சேர்ந்த 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாவட்ட வாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஜெயராம், சாரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வனிதா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பாண்டியன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மாவட்டங்களுக்கு தினகரன் நியமனம்

திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களுக்கு அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு லோகநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags : coronavirus monitoring officers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT