தமிழ்நாடு

தமிழகத்தில் 23 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

5th May 2021 08:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,310 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 167 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் புதிதாக 23,310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,72,602-ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,28,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

படிக்க: நாளை முழு ஊரடங்கு: கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

ADVERTISEMENT

புதிதாக 20,026 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11,29,512-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 167 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,779-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,291 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனல் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 364081-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 32917-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 58 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4952-ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய கரோனா முழு விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

Tags : coronavirus COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT