தமிழ்நாடு

திருச்சியில் கார் அலங்கார உதிரிபாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து

5th May 2021 10:25 AM

ADVERTISEMENT


திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள கார் அலங்கார (டெக்கர்ஸ்) உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் பொருத்தம் செய்யும் கடையில் புதன்கிழமை காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

அக்கம்பக்கத்தினர் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நிலைய அலுவலர் மெல்கி ராஜா தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென அருகில் இருந்த பேக்கரி உள்ளிட்ட பிற கடைகளுக்கும் தீ பரவியது. 

இதில், கார் உதிரிபாகங்கள் விற்பனை கடையில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்பட பேக்கரியில் இருந்த பொருள்களும் தீயில் எரிந்து கருகின. 

கார் உதிரி பாக விற்பனை கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Car decoration parts store fire Trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT