தமிழ்நாடு

தேர்தலில் தோல்வி ஏன்?: கமல் ஆலோசனை

4th May 2021 12:33 PM

ADVERTISEMENT

தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகேந்திரன், சிநேகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

படிக்க: கரோனா: அதிகாரிகளுடன் 2-வது நாளாக ஸ்டாலின் ஆலோசனை

மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த நிலையில், முடிவில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். 

Tags : Tamil nadu kamalhassan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT