தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

4th May 2021 12:27 PM

ADVERTISEMENT

கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் தொடங்கியிருக்கும் நிலையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும். 

விதர்பா முதல் கேரளா வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

ADVERTISEMENT

04.05.21: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

05.05.21: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

06.05.21: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமான உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (செ.மீ)

கொடுமுடி (ஈரோடு), உத்தமபாளையம் தலா 5 செ.மீ, போடிநாயக்கனுர், எருமைப்பட்டி, திருவாடானை, பெரியார், கயத்தாறு தலா 4 செ.மீ மழையும், குளச்சல், வாடிப்பட்டி தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 


 

 

Tags : IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT