தமிழ்நாடு

பெரும்பான்மை கிடைக்காததற்கு எந்த கட்சியும் காரணமில்லை: முன்னாள் அமைச்சர் உதயகுமார்

4th May 2021 02:37 PM

ADVERTISEMENT

 

அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததற்கு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செவ்வாய்க்கிழமை காலை சேலம் வந்தார். பிறகு அவர் சேலத்தில் தங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு இன்னும் அவர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதை உணர்த்துகிறது.

கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்க புதிய அரசு எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து சேவையாற்ற வேண்டும். 

அதிமுகவுக்குப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காததற்கு வேறு எந்த கட்சியையும் காரணம் சொல்ல முடியாது.

ஐந்து முனை போட்டியில் மூன்று கட்சிகளையும் மக்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT