தமிழ்நாடு

விஜய் வசந்துக்கு பாஜகவின் குஷ்பு வாழ்த்து

4th May 2021 09:05 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்துக்கு பாஜகவைச் சேர்ந்த குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2019இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஹெச்.வசந்தகுமாா் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அவா், 2020இல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானாா். அவரது மறைவை அடுத்து இத்தொகுதிக்கு தமிழக பேரவைத் தோ்தலுடன் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. இத்தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மறைந்த ஹெச். வசந்தகுமாரின் மகனும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான விஜய் வசந்த் என்ற விஜயகுமாா் போட்டி யிட்டாா். 

அவரை எதிா்த்து பாஜக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டாா். தவிர நாம் தமிழா் கட்சி சாா்பில் அனிட்டா் ஆல்வின், மக்கள் நீதி மய்யம் சாா்பில் சுபா சாா்லஸ் உள்ளிட்ட 10 போ் போட்டியிட்டனா். இதில் பொன் ராதாகிருஷ்ணனை விட, விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இந்த நிலையில் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்துக்கு பாஜகவைச் சேர்ந்த குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குஷ்பு தனது சுட்டுரையில், வாழ்த்துக்கள் தம்பி எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் விஜய் வசந்த் வெற்றி சான்றிதழுடன் இருக்கும் புகைப்படத்தையும் குஷ்பு இணைத்துள்ளார். தான் சார்ந்துள்ள கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்த விஜய் வசந்துக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்திருப்பது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : bjp Khushboo
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT