தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்படுமா? 

4th May 2021 02:57 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் குரூப் 1 முதன்மை எழுத்துத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 தொகுதிக்குள் வரும் துணை ஆட்சியா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில், 18 துணை ஆட்சியா், 19 துணை கண்காணிப்பாளா், 10 வணிகவரிகள் உதவி ஆணையாளா், 14 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 4 ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், 1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் 1 என மொத்தம் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த 2020-ஆம்ஆண்டு ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது.

இதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தோ்வுக்கு 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தோ்வுக் கூடங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 150 இடங்களில் தோ்வுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வு மே மாத இறுதியில் நடத்தப்பட்டால் சுமார் 3,500 பேர், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து 3 முதல் 4 நாள்கள் தங்கியிருக்க நேரிடும். தேர்வெழுதும் பெண்கள் தங்களுடன் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துவந்து விடுதிகளில் தங்குவார்கள்.

இதனால், தேர்வெழுதுவோருக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கரேனா தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த மே மாதத்தில் நடத்தப்பட இருந்த அனைத்து எழுத்துத்தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. 

எனவே, நிலைமை கட்டுக்குள் வரும் வரை, குரூப் 1 முதன்மை எழுத்துத் தேவை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வெழுதுவோர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, மே மாதத்தில் திட்டமிட்டபடி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டால், தேர்வெழுதுவோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. கடும் சிரமத்துக்கு இடையே படித்து குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

Tags : TNPSC group exam written exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT