தமிழ்நாடு

கரோனா: மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனை

4th May 2021 12:17 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

படிக்க: தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கக்கோரி வழக்கு: நாளை விசாரணை

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 6  முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாகவே கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

நேற்று நடைபெற்ற ஆலோசனையில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், மருந்து போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Tags : MK stalin coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT