தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தக்கோரி வழக்கு: நாளை விசாரணை

4th May 2021 12:09 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக நாளை (மே 5) விசாரிக்கவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் அவசர மனுவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்துள்ளார். 

படிக்க: கரோனா: அதிகாரிகளுடன் 2-வது நாளாக ஸ்டாலின் ஆலோசனை

அதில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முழு முடக்கம் விதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

ADVERTISEMENT

அவசர மனுவாக தாக்கல் செய்துள்ளதால், இதனை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : coronavirus high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT