தமிழ்நாடு

1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம்: தமிழக சுகாதாரத் துறை

4th May 2021 10:17 AM

ADVERTISEMENT


சென்னை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள், நிரந்தரப் பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2015 - 2016-ஆம் ஆண்டு எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்த ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 1,212 செவிலியர்களின் ஒப்பந்தம் வரும் ஐந்தாம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த நிலையில், அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ள செவிலியர்கள், மே 10-ஆம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் தற்போது கரோனா பேரிடர் தீவிரமடைந்து வருவதால், இவர்களை சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ரூ.15 ஆயிரத்தை ஊதியமாகப் பெற்று வந்த செவிலியர்களுக்கு, இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்த தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிய தமிழக அரசுக்கு செவிலியர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
 

Tags : coronavirus hospital tn govt nurse
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT