தமிழ்நாடு

மாநிலத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றுவோம்: வானதி

3rd May 2021 06:20 PM

ADVERTISEMENT

ஆக்கப்பூர்வமான வகையில் மத்திய அரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம் என்று கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் வாக்குறுதிகளை மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் உதவியுடன் செய்து முடிப்போம்

தற்போதைய சூழலில் மக்களுக்கு நன்மை செய்வதையே வெற்றிக் கொண்டாட்டமாக கருதுகிறோம் என்று கூறினார்.

ADVERTISEMENT

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 52,627 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 

Tags : bjp Vanathi Srinivasan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT