தமிழ்நாடு

ஆட்சித் தேர் சரியாக செயல்படுவதற்கு அச்சாணியாக இருப்போம்: அதிமுக

3rd May 2021 11:35 AM

ADVERTISEMENT

 

சென்னை: அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பளார்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகம் எனும் நாணயத்தின் ஒரு பக்கம் ஆளும் கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித் தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அச்சாணியாகவும் செயல்பட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. 

ADVERTISEMENT

தமிழக பேரவையிலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி எனும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

அதிமுக மற்றும் கூட்டணிக கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பணியாற்றிய கட்சியினருக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கட்சியைக் காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் எனறு தெரிவித்துள்ளனர்.
 

Tags : admk dmk ops eps tamilnadu election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT