தமிழ்நாடு

மருத்துவருக்கு கரோனா: சேவூர் கால்நடை மருத்துவமனை மூடல்

3rd May 2021 06:20 PM

ADVERTISEMENT

அவிநாசி அருகே மருத்துவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சேவூர் கால்நடை மருத்துவமனை மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.

அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சிக்கு உள்பட்ட கால்நடை மருத்துவமனை சேவூர-கோபி சாலை சந்தையப்பாளையம் அருகே செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இம்மருத்துவமனையில் பணியாற்றி வரும் 35 வயது ஆண் மருத்துவருக்கு கரோனா நோய் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து உதவி இயக்குநர்(கால்நடை பராமரிப்பு) பரிமலா ராஜ்குமார் கூறியது: மருத்துவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சேவூர் கால்நடை மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்படுகிறது. ஆகவே சேவூர் பகுதி பொதுமக்கள் மூன்று நாள்களுக்கு கால்நடை மருத்துவனைக்கு வருவதைத் தவிர்த்து, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று பயன்பெறலாம் என்றார். மேலும் கால்நடை மருத்துவமனை முழுதும் சேவூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

Tags : அவிநாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT