தமிழ்நாடு

அதிகாரப்பூர்வ முடிவு: திமுக 159, அதிமுக 75 இடங்களில் வெற்றி

3rd May 2021 09:35 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று (மே 2) 234 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பெரும்பாலான தொகுதிகளின் முடிவு நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

படிக்க: மே 7-ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

குறிப்பாக திமுக 133 தொகுதிகளிலும், அதன் கூட்டணிகளான காங்கிரஸ் 19, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன.

இதேபோன்று அதிமுக 66 தொகுதிகளிலும், பாஜக 4, பாமக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

படிக்க: அரசு உயர் அலுவலர்களுடம் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தேர்தல் ஆணைய தகவல்களின்படி திமுக 37.7% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சிகளின் வாக்கு விழுக்காடு விபரம்: காங்கிரஸ் 4.27%, பாமக 3.80%, பாஜக 2.62%, தேமுதிக 0.43%, சிபிஐ 1.09%, சிபிஎம் 0.85%,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.48%.

Tags : DMK DMK alliance ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT