தமிழ்நாடு

மே 5 வணிகர் நாளில் கடையடைப்பு வேண்டாம்: வணிகர் சங்க பேரமைப்பு

3rd May 2021 03:18 PM

ADVERTISEMENT


சென்னை: ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், மே 5-ஆம் தேதி வணிகர் நாளை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மே 5, புதன்கிழமை காலை 9 மணியளவில் சென்னை கே.கே. நகர் ராமசாமி தெருவில் உள்ள பேரமைப்புக்குச் சொந்தமான வளாகத்தில் சென்னை மண்டலத்தலைவர் கே. ஜோதிலிங்கம் தலைமையில் வணிகக் கொடியேற்றும் நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேடு வணிக வளாகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றன.

ஆண்டு தோறும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், இந்த ஆண்டு மட்டும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், வணிகர்களின் வாழ்வாதார நிலையை கருத்தில் கொண்டும், கடைகளுக்கு விடுமுறை அளிக்காமல், மாலையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், அரசின் வழிகாட்டுதல்களுடன், உரிய கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும் என்று பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
 

Tags : may shops tamilnadu holiday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT