தமிழ்நாடு

நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

3rd May 2021 12:07 PM

ADVERTISEMENT

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை(மே4) மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

மே 4 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அதற்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 

ADVERTISEMENT

வருகிற மே 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags : Election Result dmk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT