தமிழ்நாடு

தமிழகத்தில் 21 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

3rd May 2021 08:02 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,952 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் புதிதாக  20,952 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,28,064-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 122 பேர் உயிரிழந்தனர். 50 வயதுக்கு மேற்பட்டோரில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,468-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் 18,016 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 10,90,338-ஆக அதிகரித்துள்ளது.

தலைநகரான சென்னையில் தொடர்ந்து 6-ம் நாளாக ஆறாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுசென்னையில் இன்று புதிதாக 6,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகமட்சமாக 38 பேர் உயிரிழந்தனர். புதிதாக 5,384 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

12 வயதுக்குட்பட்ட 748 சிறார்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tags : Tamil nadu coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT