தமிழ்நாடு

வாழ்த்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க. ஸ்டாலின் நன்றி

3rd May 2021 04:22 PM

ADVERTISEMENT


சென்னை: தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்  அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது சுட்டுரைப் பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தனக்கு வாழ்த்துத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு மு.க. ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் சுட்டுரையில், ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அவரது சுட்டுரை..
 

Tags : ops stalin mk stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT