தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

3rd May 2021 12:36 PM

ADVERTISEMENT

திமுக ஆட்சியமைக்கவுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் பதவியேற்பு

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை(மே4) மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 

வருகிற மே 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags : திமுக election result
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT