தமிழ்நாடு

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் யார்?

3rd May 2021 05:12 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இவர், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் திலகபாமாவை தோற்கடித்துள்ளார். 

இரண்டாவதாக, திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ. வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் தணிகைவேலை தோற்கடித்தார். 

மூன்றாவதாக பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஏ. கிருஷ்ணசாமி 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் ராஜமன்னார் தோல்வி அடைந்தார். 

ADVERTISEMENT

நான்காவதாக எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் கே. பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

தொடர்ந்து ஐந்தாவதாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என். நேரு 85,109 வாக்குகள் வித்தியாசத்திலும், ஆறாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 70,384 வாக்குகள் வித்தியாசத்திலும், அதையடுத்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின்  69,355 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று ஏழாவது இடத்திலும் உள்ளனர். 

8 ஆவது இடத்தில் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு - 60,992, 9 ஆவது இடத்தில் திருக்கோயிலூர் தொகுதி திமுகவின் கே. பொன்முடி - 59,680, 10 ஆவது இடத்தில் மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் எஸ். கதிரவன் - 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

தொடர்ந்து 11 ஆவது இடம் - மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். சுதர்சனம் 57,071 வாக்குகள்,

12 ஆம் இடம் - தளி தொகுதி சிபிஐ வேட்பாளர் டி.ராமச்சந்திரன் -56,226 வாக்குகள், 

13 ஆம் இடம் - கிள்ளியூர் தொகுதி காங்கிரஸின் எஸ். ராஜேஷ் குமார் - 55,400 வாக்குகள், 

14 ஆம் இடம் - ஓமலூர் தொகுதி ஆர்.மணி(அதிமுக) - 55,294,

15 ஆம் இடம்- ஆவடி தொகுதி எஸ்.எம்.நாசர்(அதிமுக) - 55,275 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளனர். 

தொடர்ந்து 16 ஆவது இடத்தில் திருவிக நகர்- சிவகுமார்(திமுக) - 55,013 

17 ஆவது இடத்தில் பெரம்பூர் - ஆர்.டி.சேகர்(திமுக) - 54,976 

18 ஆவது இடத்தில் திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்(திமுக) -53,797

19 ஆவது இடத்தில் திருவையாறு - துரை சந்திரசேகரன்(திமுக) - 53,650

20 ஆவது இடத்தில் பாளையங்கோட்டை - அப்துல் வாகப்(திமுக) - 52,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

Tags : election result
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT