தமிழ்நாடு

புதுச்சேரியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு 

3rd May 2021 01:10 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவித்து வருகின்றது. 

அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. 

ADVERTISEMENT

ஏற்கெனவே, இரவு நேர பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், இன்று முதல் மே 10(திங்கள்கிழமை) வரை ஊரடங்கு மேலும் நீட்டித்துள்ளதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். 
 

Tags : Curfew புதுச்சேரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT