தமிழ்நாடு

சென்னையில் 31,913 கரோனா நோயாளிகள்

3rd May 2021 11:59 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 31,913 ஆக உள்ளது. 

ஒட்டுமொத்தமாக கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 58.29 சதவீதம் பேர் ஆண்கள். 41.71 சதவீதம் பேர் பெண்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தலா 3 ஆயிரத்தைத் தாண்டியது.

ADVERTISEMENT

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,45,966 ஆக உள்ளது. இவர்களில் 3,09,233 பேர் குணமடைந்துவிட்டனர். 4,820 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். 31,913 பேர் சிகிக்கையிலிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த பாதிப்பில் 9 சதவீதமாகும்.

மொத்தமாக 15 மண்டலங்களில் திருவிகநகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில்தான் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

மிகக் குறைந்த அளவாக மணலியில் 164 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மண்டல வாரியாக நிலவரம்.. 

Tags : coronavirus chennai update corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT