தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்குப் பின் தாமரை மலர்ந்தது: சபதம் நிறைவேறியது - எல். முருகன்

3rd May 2021 04:01 PM

ADVERTISEMENT

 

2021-ஆம் ஆண்டில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள், பேரவையை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பாஜக மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. 

தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில், 2021ல், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

ADVERTISEMENT

20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. எம்.ஆர். காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், டாக்டர் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களது அனுபவம், தொலைநோக்குச் சிந்தனை ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும்.

சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, தமிழக சட்டப்பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் தாமரை மலா்ந்துள்ளது. வெற்றி வேட்பாளா்கள் நான்கு போ் வரை பேரவைக்குச் செல்லவுள்ளனா். கடந்த 2001-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது, 21 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி, காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூா், தளி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இப்போது அதிமுக: 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணியில் இடம்பெற்று பேரவையில் நுழைந்த பாஜக, இப்போது அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வென்று மீண்டும் பேரவைக்குச் செல்லவுள்ளது. நாகா்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
 

Tags : L murugan bjp thamarai lotus mla admk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT