தமிழ்நாடு

திமுக 158, அதிமுக 76 தொகுதிகளில் முன்னிலை: இரவு 8 மணி நிலவரம்

2nd May 2021 08:09 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இரவு 8 மணி நிலரவப்படி திமுக 158 தொகுதிகளிலும், அதிமுக 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

அதிமுகவை விட 46 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், திமுகவிற்கு வெற்று வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம்.

இதனிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 158 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றனர். இதில் திமுக 124 தொகுதிகளிலும், 

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி -17 
மதிமுக -4
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -2
விடுதலை சிறுத்தைகள் கட்சி -4
மற்றவை -4

இதேபோன்று அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக 66 தொகுதிகளிலும்,
பாமக -5
பாஜக -4
தமாகா -0
மற்றவை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள்:

துறைமுகம், சேப்பாக்கம், பெரம்பலூர், கும்பகோணம், செங்கம், திருவண்ணாமலை, நெய்வேலி, திருவாடானை, கீழ்பென்னாத்தூர், ராஜபாளையம், பேராவூரணி, நாகப்பட்டினம், மதுரை, திருச்செந்தூர், திருவிடைமருதூர், கர்ந்தர்வக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை,  அருப்புக்கோட்டை, கலசப்பாக்கம், திருவள்ளூர், கம்பம்.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகள்:

கடையநல்லூர், நன்னிலம், கோபிசெட்டிபாளையம், குமாரபாளையம், கே.வி.குப்பம், போளூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அரூர், கூடலூர், போளூர், நாகர்கோவில், நாகர்கோவில், பாலக்கோடு, திண்டிவனம், எடப்பாடி, அரக்கோணம், ஒரத்தநாடு, சிதம்பரம், நாகர்கோவில், மேலூர், ஊத்தங்கரை, மதுராந்தகம், 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT