தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 151 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
திமுக கூட்டணியில் திமுக 116 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், மதிமுக, விசிக தலா 4 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஆளும் அதிமுக கூட்டணியில், அதிமுக 73 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. கோவை மேற்கு தொகுதியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.
அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட முன்னணியில் இல்லை.