தமிழ்நாடு

11 மணி நிலவரம்: பெரும்பான்மை இடங்களில் திமுக முன்னிலை

2nd May 2021 11:17 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 11 மணி நிலவரப்படி பெரும்பான்மை இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

கொளத்தூர், விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், அரியலூர், சங்கராபுரம், காஞ்சிபுரம், ஆலந்தூர், குன்னம், பெரம்பலூர் உள்பட 108 இடங்களில் திமுகவும், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன.

ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில், அதிமுக கட்சி எடப்பாடி, செய்யூர், ராசிபுரம், சேந்தமங்கலம் உள்பட 86 தொகுதியிலும், பாமக 10 தொகுதியிலும், பாஜக 5 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி. ராமு முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT

ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் குஷ்பு பின்னடைவை சந்தித்துள்ளார். அதுபோல கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பின்னணியில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார்.

ஆவடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் க. பாண்டியன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT