தமிழ்நாடு

12 மணி நிலவரம்: திமுக 140; அதிமுக 93 இடங்களில் முன்னிலை

2nd May 2021 12:13 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 12 மணி நிலவரப்படி 140 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

திமுக மொத்தம் போட்டியிட்ட 173 தொகுதிகளில் 111 தொகுதிகளிலும், காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 13 தொகுதியிலும், மதிமுக, விசிக தலா 4 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா 2 இடங்களிலும், கொமதேக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில், அதிமுக போட்டியிட்ட 179 தொகுதிகளில் 80 தொகுதிகளிலும், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கோவை தெற்கு தொகுதியில் கமல் முன்னிலையில் உள்ளார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி தான் போட்டியிட்ட 142 தொகுதியில் ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.

ADVERTISEMENT

அமமுகவும், நாம் தமிழர் கட்சியும் இதுவரை தங்களது முன்னிலைக் கணக்கைத் தொடங்காமல் உள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர்.

12 மணி நிலவரப்படி அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத், பெஞ்சமின், பாண்டியராஜன், எம்.ஆர். விஜயபாஸ்கர், வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT