தமிழ்நாடு

மேட்டூர் அருகே மனைவி கொலை: கணவன் காவல்நிலையத்தில் சரண்

31st Mar 2021 07:59 AM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் நங்கவள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்தாா்.

நங்கவள்ளி அருகே குப்பனூரை சேர்ந்தவர் விஜயகுமார் (31). சேலத்தில் தனியார் செயலகத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வந்தவரை அவரது மனைவி ஈஸ்வரி(29) கண்டித்தார். அதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. 

அப்போது மதுபோதையில் இருந்த விஜயகுமார், ஈஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளாா். பின்னர் நங்கவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

ADVERTISEMENT

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ச ஈஸ்வரியின் சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Tags : Wife killed n Husband surrenders Mettur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT