தமிழ்நாடு

வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம்

31st Mar 2021 03:22 PM

ADVERTISEMENT

 

கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை கோவை வந்தார். 

தொடர்ந்து அவர் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை ஆரம்பித்தார். பின்னர் பிரசார வாகனத்தில் ஏறி இரட்டை விரலை காமித்து வாக்குகளைச் சேகரித்தார். 

தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் வாகன பேரணி நடைபெற்றது. புலியகுளம் பகுதியில் துவங்கிய வாகன பேரணி ராமநாதபுரம், சுங்கம், உக்கடம் வழியாகச் சென்று தேர்நிலை திடலை வந்தடைந்து. இதில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படி பிரச்சாரம் மேற்கொண்டு சென்றார். 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து தேர்நிலை திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து உரையாடினார்.
 

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT