தமிழ்நாடு

சேலம்: முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டுப்பதிவு தொடக்கம்

31st Mar 2021 05:42 PM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சி பகுதி முழுவதும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

மார்ச் மாதம் 6-ம் தேதி தமிழக சட்ட மன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டுப் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று காலை முதல் தபால் ஓட்டுப் போடத் தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சேலம் தெற்கு தொகுதியில் மட்டும் 80 வயதுக்கு மேற்பட்ட 675 மூத்த குடிமக்கள் மற்றும் 112 மாற்றுத் திறனாளிகள் என 787 பேர் தபால் ஓட்டுப் போட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இவர்களிடம் தபால் ஓட்டுக்களைச் சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இன்று காலை முதல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களை நேரில் சந்தித்து தபால் ஓட்டு பெற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தபால் ஓட்டுப் பதிவு நாளையும் நடக்க உள்ளது.

Tags : தபால் ஓட்டு சேலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT