தமிழ்நாடு

நாமக்கல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

31st Mar 2021 12:08 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயருடன், சின்னங்கள் பொருத்தும் பணி வட்டாட்சியர் அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம்(தனி) தொகுதியில் 332, சேந்தமங்கலம்(ப.கு) தொகுதியில் 342, நாமக்கல் தொகுதியில் 377, பரமத்தி வேலூர் தொகுதியில் 317, திருச்செங்கோடு தொகுதியில் 323, குமாரபாளையம் தொகுதியில் 358 வாக்குச்சவாடிகள் என மொத்தம் 2,049 வாக்குசாடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலான இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் அச்சிடப்பட்ட தாள் பொருத்தும் பணி புதன்கிழமை காலை தொடங்கி நடைபெறுகிறது. அதன்படி, ராசிபுரம் தொகுதியில் தலா 399 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 432 விவிபேட் இயந்திரங்களிலும், சேந்தமங்கலம் தொகுதியில் தலா 411 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 445 விவிபேட் இயந்திரங்களிலும், நாமக்கல் தொகுதியில் தலா 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 453 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 491 விவிபேட் இயந்திரங்களிலும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் தொகுதியில் உள்ள தலா 381 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 381 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 413 விவிபேட் இயந்திரங்களிலும், திருச்செங்கோடு தொகுதியில் தலா 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 388 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 420 விவிபேட்  இயந்திரங்களிலும், குமாரபாளையம் தொகுதியில் தலா 430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 430 கட்டுப்பாட்டு இயந்திரங்களிலும், 466 விவிபேட் இயந்திரங்களிலும் வித்தகர் பின்னர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்பட்டு வருகிறது. 

மேலும் வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த இயந்திரங்களை அனுப்ப வேண்டும் என்பது தொடர்பான ஒதுக்கீடு கணினி குலுக்கல் முறையில் திங்கள் கிழமை நடைபெற்றது. 

முன்னதாக ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளை தவிர மீதம் உள்ள நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 4  தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை 16க்கும் மேல் உள்ளதால் கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம்பெறுகின்றன. நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இதர தொகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களில் விவிபேட் இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளை தேர்தல் பார்வையாளர் பி.ஏ.ஷோபா, வருவாய் கோட்டாட்சியர் மு. கோட்டைக்குமார் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

Tags : Candidate name symbols voting machines
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT