தமிழ்நாடு

மருத்துவர் சைமனின் உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

31st Mar 2021 12:11 PM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா நோய்த் தொற்றால் இறந்து வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள  மருத்துவர் சைமனின் உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து மருத்துவரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. மருத்துதுவர் உடல் அடக்கத்தை எதிர்த்து வன்முறையில்  ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி தாக்கல் செய்த மனுவில், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட எனது கணவரின் உடலை எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யக் கோரி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், எனது கோரிக்கையை கடந்த மே 2-ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டார். எனது கோரிக்கையை நிராகரித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனது கணவரின் உடலை   கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு  நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், 
வேலங்காடு மயானத்தில்  அடக்கம் செய்யப்பட்டுள்ள  மருத்துவர் சைமனின் உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும். இதற்கான உரிய நடைமுறைகளை பின்பற்றவும்,  போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்து மருத்துவர் சைமனின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : High Court order Kilpauk Cemetery
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT