தமிழ்நாடு

திருச்சியில் 5.96 கிலோ தங்கம் பறிமுதல்

31st Mar 2021 04:51 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 5.96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம், பொருள்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் பறக்கும்படையினர் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட பறக்கும்படையினர், பெரியகடை வீதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்திச் சோதனையிட்டனர். காரில் இருந்தவர்களிடம் 2 பாக்ஸ்கள் இருந்தன. 

ADVERTISEMENT

அவற்றில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. ஆனால், அந்த நகைகள் எங்கிருந்து, எதற்காகக் கொண்டுவரப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த பறக்கும்படையினர், திருச்சி வட்டாட்சியர் குகனிடம், நகைகள் அனைத்தையும் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT