தமிழ்நாடு

விழுப்புரத்தில் களைகட்டிய ஹோலி பண்டிகை

29th Mar 2021 04:38 PM

ADVERTISEMENT

 

வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் வட மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு ஹோலிப் பண்டிகை திங்கள்கிழமை வட மாநிலங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருவதால் இங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

சிறுவர், சிறுமியர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது நண்பர்கள், உறவினர்கள் முகங்களில் வண்ணப்பொடிகளை  பூசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

'ஹாப்பி... ஹோலி...' என்று இளைஞர்கள் கூச்சலிட்டு மற்றவர்களுக்கு தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்தனர். குறிப்பாக விழுப்புரம் காமராஜர் தெரு, சங்கர மடத் தெரு உள்ளிட்ட இடங்களில் திரண்ட வட மாநிலத்தவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. அவர்கள் இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர். ஹோலி கொண்டாட்டத்தால் அந்த பகுதி முழுவதும் வண்ணமயமாகக் காட்சியளித்து.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT