தமிழ்நாடு

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி: சத்யபிரத சாஹு

29th Mar 2021 01:14 PM

ADVERTISEMENT


சென்னை: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரத சாஹு தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 88,947 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்காக ஒட்டுமொத்தமாக 1,55,120 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றுடன் 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் இணைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் 1,20,807  விவிபேட் (வாக்காளர், தான் பதிவு செய்த வாக்கினை சரிபார்க்க உதவும் இயந்திரம்) கருவிகள் இணைக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் கருவி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் 89,185 பேர் அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 

ADVERTISEMENT

தமழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.319.02 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியாக சேலத்தில் 44.47 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT