தமிழ்நாடு

தில்லி - கேரளம் - தமிழகம் - புதுச்சேரி: பிரதமரின் நாளைய முழுப் பயண விவரம்

29th Mar 2021 08:49 PM

ADVERTISEMENT


பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தில்லியிலிருந்து புறப்பட்டு கேரளம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடியின் முழுப் பயண விவரம்:

  • தில்லியிலிருந்து தனி விமானம் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணி அளவில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.15 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். 
  • கோவையிலிருந்து காலை 10.20 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம் பாலக்காட்டை 10.50 மணி அளவில் சென்றடைகிறார். அங்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. 
  • பிற்பகல் 12 மணி அளவில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.45 மணி அளவில் தாராபுரம் பொதுக்கூட்ட மேடைக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். சுமார் 55 நிமிடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.
  • இதன்பிறகு, பிற்பகல் 13.45 மணி அளவில் புறப்பட்டு 2.20 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். 
  • கோவையிலிருந்து தனி விமானத்தில் 2.25 மணி அளவில் புறப்பட்டு 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். 
  • பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து 3.35 மணி அளவில் புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார்.
Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT