தமிழ்நாடு

பழனிசாமி கண்கலங்கியதால் வேதனை; மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன்: ஆ. ராசா

29th Mar 2021 12:00 PM

ADVERTISEMENT


சென்னை: முதல்வர் பழனிசாமி குறித்த விமரிசனத்துக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கூறியுள்ளார்.

எனது பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் பழனிசாமி கண் கலங்கியதால், மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னால் முதல்வர் கண்கலங்கினார் என்பதைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். எனவே, முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்துப் பேசியதற்கு மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன் என்று ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

இடப் பொருத்தமற்ற, சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக அடிமனதிலிருந்து எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பேச்சால் அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே முதல்வர் பழனிசாமி காயப்பட்டிருந்தால் மனம் திறந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை என்று ஆ. ராசா கூறியுள்ளார். 

ADVERTISEMENT

மேலும், எனது பேச்சு  இரண்டு அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விமரிசனமல்ல.. பொதுவாழ்வில் இரண்டு ஆளுமை குறித்த மதிப்பீடும் ஒப்பீடும்தான் என்றும் ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார்.

தனது தாயார் குறித்து ஆ.ராசா விமரிசித்தார் என்று நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது முதல்வர் எடப்பாடி  கே. பழனிசாமி நா தழுதழுத்து கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT