தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

29th Mar 2021 12:18 PM

ADVERTISEMENT

 

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல  சுழற்சியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

ADVERTISEMENT

30.03.2021 முதல் 02,04.20021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக தெளிவாக காணப்படும்.

வரும் ஏப்ரல் 2 முதல் தரைக்காற்று, வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூனறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு

தென்காசி 3, போடி நாய்க்கனுர், செங்கோட்டை தலா 2 செ.மீ மழையும், சூரலகோடு, ஆயக்குடி தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. 

காற்றழுத்த தாழ்வுப் தெற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீணவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags : Rain IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT