தமிழ்நாடு

ஆ.ராசா அவதூறு பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பிவைப்பு

29th Mar 2021 02:24 PM

ADVERTISEMENT

ஆ.ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா கடந்த 26-இல் பிரசாரம் செய்தார். அப்போது அவா், முதல்வா் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக ஒரு விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரிதும் சா்ச்சையை ஏற்படுத்தியது. 
அந்த விடியோ காட்சியில் தான் உண்மையில் பேசிய சில வாா்த்தைகள் வெட்டி, ஒட்டப்பட்டுள்ளன என்றும் விடியோ காட்சி, முற்றிலும் தவறானது என்றும் ஆ.ராசா சனிக்கிழமை விளக்கம் அளித்தாா். இதற்கிடையே, ஆ.ராசா பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். 
இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்கக் கோரி அதிமுக சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. 
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த விமரிசனத்துக்காக மனம் திறந்து மன்னிப்புக் கோருவதாகவும் ஆ. ராசா இன்று தெரிவித்தார். 
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ஆ.ராசா விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தனிநபர் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானதால் ஆ.ராசாவின் விமர்சனம் தொடர்பாக அறிக்கை அனுப்பிவைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : A Raja
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT