தமிழ்நாடு

புதுச்சேரியில் நாளை ஒரு நாள் 144 தடை உத்தரவு: மாவட்ட ஆட்சியர்

29th Mar 2021 04:07 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரி வரவிருக்கும் நிலையில், நாளை ஒரு நாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வான்வெளியில் விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அரசியல் கட்சித் தலைவா்கள், வேட்பாளா்களும் தங்களது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனா். அந்த வகையில், வருகிற 30 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்துக்காக புதுச்சேரிக்கு வரவுள்ளாா்.

புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலைத் திடலில் பாஜக சாா்பில் நடைபெறும் நாளை மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

பிரதமரின் வருகையையொட்டி, பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள ஏஎப்டி பஞ்சாலைத் திடல் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரிக்கு விமானம் மூலம் பிரதமா் மோடி வரவுள்ளதால், லாசுப்பேட்டை விமான நிலையத்தை காவல் துறை உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT