தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4,416 ஆக உயர்வு

27th Mar 2021 12:56 PM

ADVERTISEMENT

 

சென்னையில் நேற்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டிய நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி இது 4,416 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. இதில் தேனாம்பேட்டை 560 நோயாளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இவற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் இராயபுரம், திருவிகநகர், அம்பத்தூர் மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாகக் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,44,686 ஆக உள்ளது. இவர்களில் 2,36,048 பேர் குணமடைந்துவிட்டனர். 4,222 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர். தற்போது 4,416 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 560 பேரும், கோடம்பாக்கத்தில் 495 பேரும், அண்ணாநகரில் 479 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தவிர, ராயபுரத்தில் 418 பேரும் திருவிகநகரில் 394 பேரும் அம்பத்தூரில் 379 பேரும் சிகிச்சையில் உள்ளனர். சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 1 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.

மார்ச் 26: 739
மார்ச் 25: 664
மார்ச் 24: 633
மார்ச் 23: 532
மார்ச் 22: 496
மார்ச் 21: 466
மார்ச் 20: 458 
மார்ச் 19: 421
மார்ச் 17: 395 
மார்ச் 16: 352 
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 01: 171

தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 11,318 ஆக அதிரித்துள்ளது. நேற்று புதிதாக 1,971 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
 

Tags : coronavirus chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT