தமிழ்நாடு

லியோனியின் பெயரைக் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்த கனிமொழி

27th Mar 2021 03:09 PM

ADVERTISEMENT


சென்னை: பெண்கள் எல்லாம் பேரல் போல ஆகிவிட்டார்கள் என்று விமரிசித்த லியோனியின் பெயரைக் குறிப்பிடாமல், அதுபோன்ற பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இது குறித்து கனிமொழி தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்

ADVERTISEMENT

முன்னதாக, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கொள்கைபரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, வெளிநாட்டு பசுக்களின் பாலைக் குடிப்பதால், தமிழக பெண்களின் உடல் பேரல் போல ஆகிவிட்டதாக விமரிசித்திருந்தார்.

இதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், நட்சத்திரப் பேச்சாளர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், லியோனியின் பெயரைக் குறிப்பிடாமல், பெண்களை விமரிசிக்கும் தலைவர்கள் யாராக இருந்தாலும் கண்டனம் தெரிவிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
 

Tags : DMK கனிமொழி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT