தமிழ்நாடு

சேலத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 85% பேர் தபால் வாக்குகளை செலுத்தினர்

27th Mar 2021 03:52 PM

ADVERTISEMENT

தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று மார்ச் 27-ந் தேதி  சனிக்கிழமை நடந்த 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களது தபால் வாக்குகளை  நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், சங்ககிரி, ஏற்காடு, சேலம் வடக்கு, தெற்கு, மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட 11 தொகுதிகளில் , அவரவர் சொந்த தொகுதி அல்லாமல், மாவட்டத்திலுள்ள இதர 10 தொகுதிகளில் உள்ள ஏதேனும்  ஒரு இடத்தில்  மார்ச் 27-ந் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. 

11 தொகுதிகளிலும் நடந்த பயிற்சி மையத்தில், பயிற்சி நடக்கும் தொகுதியைத் தவிர இதர பத்து தொகுதிகளுக்கும்  தபால் வாக்குகளை போட தனித்தனி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளை, தேர்தல் அலுவலர்கள் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் தங்கள் வாக்குகளை மறைவான இடத்தில் பதிவு செய்து, பின், தங்கள் தொகுதிக்குரிய வாக்குப்பெட்டியில் போட்டனர். 

மாவட்டம் முழுவதும், வாக்குச்சாவடி அலுவலர் பணியை பெற்ற 18,832 பேரில் 85% பேர் தங்களது தபால் வாக்குகளை, தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னரே செலுத்தியதால் அவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிய மகிழ்வில், தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
 

ADVERTISEMENT

Tags : salem voting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT