தமிழ்நாடு

மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நில அதிர்வா?

27th Mar 2021 10:18 AM

ADVERTISEMENT


மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பயங்கர சத்தங்களுடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் உள்ள பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சத்தம் செம்பனார்கோவில் குத்தாலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணர்ந்ததாக பொது மக்கள் பீதியுடன் தெரிவித்ததாகவும், நில அதிர்வு ஏற்பட்டு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT

Tags : Earthquake mayiladuthurai Karaikal districts
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT