தமிழ்நாடு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், 1 ஆசிரியருக்கு கரோனா

27th Mar 2021 08:19 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், 1 ஆசிரியருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் 2 வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளிகளில் மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

பள்ளிகளில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறுகின்றன. கல்லூரிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இணையவழி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

மாவட்டத்தில் ஏற்கெனவே 14 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் என 217-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கும்பகோணம், ஆடுதுறையில் புதிதாக மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், 1 ஆசிரியருக்கு தொற்று இருப்பது  சனிக்கிழமை  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 14 பேரும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 217 மாணவர்களில் வெள்ளிக்கிழமை வரை 120க்கும் மேற்பட்டோர் போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா்.

Tags : coronavirus tamilnadu Thanjavur district
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT