தமிழ்நாடு

குமுளி மலைச்சாலையில் ரப்பர் சுமை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ

27th Mar 2021 12:48 PM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில், சென்னையிலிருந்து கேரளம் மாநிலம் கோட்டயத்திற்கு ரப்பர் சுமை ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீ பிடித்து எரிந்தது. 

சென்னை தாம்பரத்திலிருந்து, ரப்பர் சுமை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கோட்டயம் நோக்கி சென்றது. லாரியை கம்பத்தைச் சேர்ந்த அப்துல்சமது ஓட்டி வந்தார். சனிக்கிழமை அதிகாலை லோயர்கேம்ப் குமுளி மலைச்சாலையில் இரச்சல் பாலம் அருகே லாரி என்ஜின் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அப்துல்சமது, லாரியை மலைச்சாலை ஓரத்தில் நிறுத்தி லாரியிலிருந்து கீழே குதித்து தப்பினார்.

லாரி தீ பிடித்து எரிவதை பார்த்த, அந்த வழியாக வந்தவர்கள், குமுளி காவல் நிலையத்திற்கும், கம்பம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 
தகவலின் பேரில், காவல்துறையினர், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக குமுளி காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : truck carrying Kumuli hill road fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT